ராகுல், பிரியங்கா காந்தி ஆகியோர் விடுவிப்பு

டில்லியில் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களான ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்டோர் கைதாகி இரண்டு மணி நேரத்தில் விடுவிக்கப்பட்டனர்.

வாக்காளர் பதிவு மீளாய்வுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் தலைமைத் தேர்தல் ஆணையாளர் பதவி விலக வேண்டுமென வலியுறுத்தியும் செவ்வாய்க்கிழமை ஆரம்பமான போராட்டம் புதன் கிழமையும் தொடர்ந்தது.

வீதியை மறித்து முற்றுகைப் போராட்டத்தில் (தர்ணா) ஈடுபட்ட காங்கிரஸ் தலைவர்களைப் பொலிஸார் பலவந்தமாக வாகனங்களில் ஏற்றிப் பொலிஸ் நிலையம் கொண்டு சென்றனர். பின்னர் ஒரு மணித்தியாலத்திற்குப் பிறகு ராகுல் காந்தியை விடுவித்தனர்.

தன்மீது முதல் தகவல் அறிக்கை (எப்ஐஆர்) பதிவுசெய்வதற்கு முன்னர் கருத்து தெரிவித்த ராகுல் காந்தி, ‘எத்தனை எப்ஐஆர் வேண்டுமானாலும் போடுங்கள். இதுவரை 45 உள்ளது. எனது இலக்கு 100 என்றார்.

சிறிது நேரத்தில் பிரியங்கா காந்தி உள்ளிட்டோரும் விடுவிக்கப்பட்டனர். எனினும். பாராளுமன்ற உறுப்பினர்களை டில்லியில் தங்குமாஞறு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன் தெரிவித்துள்ளார். போராட்டத்தைத் தொட வேண்டுமென அவர் கூறியுள்ளார்.

இதனிடையே, திரிணாமுல் காங்கிரஸ் தலைவி மம்தா பெனர்ஜி வியாழக்கிழமை டில்லி செல்வதாகத் தெரிவித்துள்ளார்.

தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் பதவி விலகும் வரை போராட்டம் தொடரும் என்று காங்கிரஸ் தலைமையிலான இந்தியா கூட்டணியினர் அறிவித்துள்ளனர்.