தலவாக்கலை பகுதியில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றின் ஆசிரியர், மாணவி ஒருவருக்கு வகுப்பறைக்குள் தகாத காணொளிகளைக் காண்பித்ததாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பாக மாணவி தனது பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து, கடந்த 25ஆம் திகதி வெள்ளிக்கிழமை தலவாக்கலை பொலிஸாரிடம் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
முறைப்பாட்டின் அடிப்படையில் விசாரணைகளை முன்னெடுத்த தலவாக்கலை பொலிஸார், குறித்த ஆசிரியரை கைது செய்துள்ளனர்.
கைது செய்யப்பட்ட ஆசிரியர் திங்கட்கிழமை நுவரெலியா நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில், அவரை எதிர்வரும் ஒக்டோபர் 6ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை தலவாக்கலை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.
கௌசல்யா
