மாணவரகள் சென்ற பஸ் விபத்து

கோப்புப் படம்

புத்தளை – மொனராகலை பிரதான வீதியின் மஹகோதயா பகுதியில் இரண்டு பேருந்துகள் மோதியதில் ஆறு பேர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வெல்லவாயாவிலிருந்து மொனராகலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்துச் சபைக்குச் சொந்தமான பேருந்தும், மாத்தறையிலிருந்து அம்பாறை நோக்கிப் பயணித்த தனியார் பேருந்தும் மோதி விபத்து ஏற்பட்டுள்ளது.

மஹகோதயா பகுதியில் பயணிகளை இறக்குவதற்காக இ.போ.ச. பேருந்து நிறுத்தப்பட்டிருந்தபோது, பின்னால் வந்த தனியார் பேருந்து அதன் மீது மோதியதாக பொலிஸார் தெரிவித்தனர்.

விபத்தில் காயமடைந்த ஆறு பேரும் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.