நௌபர் மௌலவி உள்ளிட்ட 24பேர் நீதிமன்றுக்கு

நௌபர் மௌலவி உள்ளிட்ட 24பேர் நீதிமன்றுக்குக் கொண்டுவரப்பட்டனர்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் தொடர்பான பிரதான வழக்கின் தீர்ப்பு இன்று (22) வழங்கப்படவுள்ளது.

இவ்வழக்கின் பிரதான சந்தேகநாபரான நௌபர் மௌலவி உள்ளிட்ட 24 பிரதிவாதிகள் சற்று முன்னர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டுள்ளனர்.

உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதலை நடத்தி மனித படுகொலைகளை புரிந்தமை, கொடூரமான முறையில் காயங்களை ஏற்படுத்தியமை உள்ளிட்ட 23,270 குற்றச்சாட்டுகளின் கீழ் சட்டமா அதிபரால் இந்த வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.