22ஆவது திருத்தத்தை பாராளுமன்றில் நிறைவேற்றலாம்-உச்ச நீதிமன்றம்

22ஆவது திருத்தத்தை பாராளுமன்றில் நிறைவேற்றலாம் என்று உச்ச நீதிமன்றம் அறிவித்துள்ளது.

அரசியலமைப்பின் 22 வது திருத்தச் சட்டமூலத்தின் சில உறுப்புரிமைகள் அரசியலமைப்புக்கு முரணானவை அல்லவென்று உச்ச நீதிமன்றம் வியாக்கியானம் அளித்துள்ளதாக சபாநாயகர் இன்று (22) பாராளுமன்றுக்கு அறிவித்துள்ளார். 

இதனால் குறித்த சட்டமூலத்தை பாராளுமன்றின் சாதாரண பெரும்பான்மையுடன் நிறைவேற்ற முடியும் என அந்த வியாக்கியானத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.