மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் நிலவும் மழையுடனான காலநிலை காரணமாக, தேசிய கட்டிட ஆராய்ச்சி நிறுவகம (NBRO) நிலச்சரிவு தொடர்பான முன் எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை இன்று (21) மாலை 4.00 மணி முதல் நாளை (22) மாலை 4.00 மணி வரையான 24 மணி நேரத்திற்கு அமுலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அபாய எச்சரிக்கை
நிலை 3 – வெளியேறவும்
காலி மாவட்டம்: நெலுவை
களுத்துறை மாவட்டம்: வல்லாவிற்றை
கண்டி மாவட்டம்: பஸ்பாகே கோரளை
கேகாலை மாவட்டம்: தெஹியோவிற்றை, அரநாயக்கா,
கேகாலை, அரநாயக்கா, தெரணியகலை, மாவனல்லை, எட்டியாந்தோட்டை
நுவரெலியா மாவட்டம்: அம்பகமுவை, நோர்வூட், கொத்மலை மேற்கு, கொத்மலை கிழக்கு
இரத்தினபுரி மாவட்டம்: இரத்தினபுரி
அபாய எச்சரிக்கை நிலை 2 – அவதானமாக இருக்கவும்
கொழும்பு மாவட்டம்: பாதுக்கை
காலி மாவட்டம்: தவளமை, நாகொடை
களுத்துறை மாவட்டம்: அகலவத்தை, பாலிந்தநுவரை, புளத்சிங்களை, இங்கிரியா
கண்டி மாவட்டம்: உடபலாத்தை, கங்க இஹல கோரளை
கேகாலை மாவட்டம்: புளத்கொஹுபிட்டி, கேகாலை, வரகாபொலை, கலிகமுவை, ருவன்வெல்லை
மாத்தறை மாவட்டம்: அத்துரலியா, கொட்டபொலை, அக்குரஸ்ஸை, பிட்டபத்தரை
நுவரெலியா மாவட்டம்: தலவாக்கலை
இரத்தினபுரி மாவட்டம்: பெல்மதுளை, அயகமை, குருவிட்டை, நிவித்திகலை, கலவானை, எலபாத்தை
அபாய எச்சரிக்கை நிலை 1 –
விழிப்புடன் இருக்கவும்
கொழும்பு மாவட்டம்: சீதாவக்கை
காலி மாவட்டம்: நியாகமை, பத்தேகமை
கேகாலை மாவட்டம்: ரம்புக்கணை
கம்பஹா மாவட்டம்: மீரிகமை, அத்தனகல்லை
கண்டி மாவட்டம்: பாததும்பரை, யட்டிநுவரை, தொலுவை, உடுநுவரை
குருநாகல் மாவட்டம்: அலவ்வை, மாவத்தகமை, பொல்கஹவளைல, மல்லவபிட்டி
மாத்தறை மாவட்டம்: பஸ்கொடை
இரத்தினபுரி மாவட்டம்: எஹலியகொடை, கஹவத்தை, கொலொன்னை, இம்புல்பே
மழையுடனான காலநிலை தொடரும் நிலையில், மேற்குறிப்பிட்ட பகுதிகளில் வசிக்கும் மக்கள் மண் சரிவு அபாயம் தொடர்பில் அவதானமாக இருக்குமாறும், அதிகாரிகளால் வழங்கப்படும் அறிவுறுத்தல்களைப் பின்பற்றுமாறும் கேட்டுக்கொள்ளப்படுகின்றனர்.
எஸ். ஆர். இரவீந்திரன்
