துபாயில் கைது செய்யப்பட்ட பிரபல கேடியான ‘பஸ் லலித்’ என்கின்ற லலித் கன்னங்கர இன்று (25) அதிகாலை இலங்கைக்கு அழைத்து வரப்பட்டார்.
அவர் மத்திய குற்றப் புலனாய்வுப் பணியகத்திற்கு (CCIB) அழைத்துச் செல்லப்பட்டார்.
தொடர்ந்து இவரிடம் தீவிர விசாரணைகள் முன்னெடுக்கப்படவுள்ள நிலையில், இவரைத் தொடர்ந்து பலர் கைது செய்யப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.
