கல்முனை வைத்தியசாலை பெண் ஊழியர்களின் ஆடை விவகாரமாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகப் பாராளுமன்ற உறுப்பினர் ஏ. ஆதம்பாவா தெரிவித்துள்ளார்.
கல்முனை வடக்கு ஆதார வைத்தியசாலையில் நியமிக்கப்பட்ட 9 முஸ்லிம் பெண் ஊழியர்கள் ஆடை விவகாரம் காரணமாக கடமையில் இணைவதில் ஏற்பட்ட பிரச்சினைக்குத் தாம் தலையிட்டு, சம்பந்தப்பட்ட அதிகாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாக அம்பாறை மாவட்ட கரையோர பிரதேச ஒருங்கிணைப்புத் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ஏ. ஆதம்பாவா தெரிவித்தார்.
சம்மாந்துறை பிரதேச செயலகத்தில் இன்று (13) சமுர்த்தி வாழ்வாதார உதவி வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.



இதில்,சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ். எல். முகம்மது ஹனீபா, அம்பாறை மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் எஸ்.கரன், உதவி பிரதேச செயலாளர், பிரஜா சக்தி வலயத் தலைவர்கள் , சமூர்த்தி வலய முகாமையாளர்கள், உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய ஆதம்பாவா எம்பி,தமிழ், முஸ்லிம், சிங்கள மக்கள் இன, மத வேறுபாடுகளை மறந்து விட்டுக் கொடுப்புடன் வாழ்வதே நாட்டின் முன்னேற்றத்திற்கு அடிப்படை எனக் குறிப்பிட்டார்.
அரசியல் நோக்கங்களுக்காக இனங்களுக்கிடையே முரண்பாடுகளை ஏற்படுத்துவதைத் தவிர்த்து, வாழ்வாதார மேம்பாட்டுக்காக அனைவரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.
மின்மினி மின்ஹா
