மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு இராணுவப் பாதுகாப்பு

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.

மட்டக்களப்பு சிறைச்சாலையைச் சுற்றி இராணுவத்தினர்,விசேட அதிரடிப்படையினர், பொலிசார் இணைந்து பலத்த பாதுகாப்பு நடவடிக்கையில் இன்று வெள்ளிக்கிழமை (7) ஈடுபட்டுவருகின்றனர்.

கைதிகள் பாதுகாப்பாக இருப்பதாக சிறைச்சாலை அத்திட்டசகர் தெரிவித்தார்.

நாட்டில் உள்ள சிறைச்சாலைகளில் கைதிகளுக்கிடையே மோதல் ஏற்பட்டு சிறைச்சாலைகளை உடைத்து வருகின்றனர். இந்த நிலையில் நீர் கொழும்பு சிறைச்சாலையில் ஏற்பட்டட சிறை உடைப்பையடுத்து அங்கிருந்து 60 கைதிகள் மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு கொண்டுவரப்பட்டு அடைக்கப்பட்டுள்ளனர். இன்று பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டதால் அங்குப் பரபரப்பான நிலை காணப்படுகிறது.

அதேவேளை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் லலித் லீலாரெத்தின சிறைச்சாலைக்கு விஜயம் மேற்கொண்டு பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பாக ஆராய்ந்தார்.

தற்போது சிறைச்சாலையில் நீர்கொழும்பில் இருந்து கொண்டுவரப்பட்ட 60 கைதிகளில் 42 பேர் உள்ளதுடன் இன்று 980 பேர் சிறையில் உள்ளதாகவும் அவர்கள் பாதுகாப்பாக உள்ளதாகவும் சிறைச்சாலை அதியட்சகர் மோகன் தெரிவித்தார்.

மட்டக்களப்பு எஸ். வரதராஜன்