கண்டி பள்ளேகலை தும்பறை சிறைச்சாலை வளாகத்தில் பாதுகாப்பு

பள்ளேகலை தும்பறை சிறைச்சாலை வளாகத்தில் கடும் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.

கண்டி, பள்ளேகலை பகுதியில் அமைந்துள்ள தும்பறை (போகம்பறை) சிறைச்சாலை, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இன்று (07) காலை முதல் விசேட பாதுகாப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.

நாட்டின் தற்போதைய நிலைமையைக் கருத்திற்கொண்டு, பொலிஸார், இராணுவம்,பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் இணைந்து பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளனர்.

சிறைச்சாலைக்குச் செல்லும் பிரதான,உப வீதிகளில் விசேட பொலிஸ் வீதித் தடைகள் அமைக்கப்பட்டுள்ளன.பாதுகாப்பு நிலைமைகள் தொடர்பில் அதிகாரிகள் தொடர்ச்சியாக கண்காணித்து வருகின்றனர்.