பல்லன்சேனை சிறையில் காயமுற்ற கைதிகள் வெலிக்கடைக்கு அனுப்பப்பட்டுள்ளனர்.
பல்லன்சேனை சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையின் போது காயமடைந்த 28 கைதிகள் வெலிக்கடை சிறைச்சாலை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இன்று (07) காலை இந்தச் சிறைச்சாலையில் ஏற்பட்ட அமைதியின்மையைக் கட்டுப்படுத்துவதற்காக பொலிஸார், பொலிஸ் விசேட அதிரடிப்படையினர், கலகமடக்கும் பிரிவு,விமானப்படையினர் வரவழைக்கப்பட்டனர்.
நிலமையைக் கட்டுக்குள் கொண்டு வரக் கண்ணீர்ப் புகைத் தாக்குதலும் நடத்தப்பட்டது.
