கற்பிட்டி முதலைப்பாளியில் வைஎம்எம்ஏ கிளை அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் நடைபெற்றது.
கற்பிட்டி முதலைப்பாளி கிராமத்தில் வை.எம்.எம்.ஏ. (YMMA)அமைப்பின் புத்தளம் கிளையின் ஏற்பாட்டில் முதலைப்பாளி அரசுக் கல்லூரியின் அதிபர் மௌலவி ஜெமில்கான்
தலைமையில், புத்தளம் வை.எம்.எம்.ஏ அமைப்பாளர் எம்.டி எம் நபீல் ஆசிரியரின் பங்குபற்றுதலுடன், முதலைப்பாளி கிராமத்தில் வை.எம்.எம்.ஏ கிளை அமைப்பது தொடர்பான விஷேட கலந்துரையாடல் ஒன்று கிராமத்தின் அரபுக் கல்லூரியில் திங்கட்கிழமை (27) நடைபெற்றது.
முதலைப்பாளி கிராமத்தில் வை.எம்.எம்.ஏ. கிளையொன்றை ஆரம்பிப்பதற்கான முதல் கட்ட நடவடிக்கையாக இக் கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
எதிர்காலத்தில் இந்தக் கிளையின் ஊடாக கிராம மக்களின் நலனுக்காக பல்வேறு சமூக சேவைகள்,சமூக நலத்திட்டப் பணிகளை முன்னெடுக்க உள்ளதுடன் கிராமத்தின் முன்னேற்றத்திற்கும் சமூக நலனுக்கும் புதியதொரு பாதை உருவாகும் என எதிர்பார்ப்பதாக ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.
கற்பிட்டி எம் எச் எம் சியாஜ்
