போரதீவுப்பற்று பிரதேச சபை புதிய செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா கடமையேற்றார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா நேற்று 03.07.2026 உத்தியோகபூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார்.
அவரது பதவி உயர்வு ,கடமையேற்பை முன்னிட்டு, பிரதேச சபை வளாகத்தில் விசேட வரவேற்பு நிகழ்வொன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
புதிதாக போரதீவுப்பற்று பிரதேச சபை செயலாளர் பதவியேற்ற நிகழ்வில், பிரதேச சபையின் தவிசாளர் விமலநாதன் மதிமேனன் முன்னிலையில், தினவரவு டாப்பில் கையொப்பம் இட்டுத் தனது கடமையினைப் பொறுப்பேற்றார்.
இந்த நிகழ்வின் போது பிரதேச சபையின் முன்னாள் பதில் செயலாளர் எஸ்.பகீரதன், சபையின் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் எனப் பலர் கலந்துகொண்டனர்.
புதிய செயலாளருக்குப் பொன்னாடை போர்த்தி, மலர்மாலை அணிவித்து சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டதோடு, அவர் தனது புதிய பதவியில் திறம்படச் செயலாற்ற சபையின் தவிசாளர், உத்தியோகஸ்தர்கள் தங்களது மனமார்ந்த வாழ்த்துகளையும் தெரிவித்தனர்.
எஸ். வரதராஜன்
புதுப்பாலத்தின் புனரமைப்பு பணிகள் பிரபு எம்பியால் ஆரம்பித்துவைப்பு




