தமிழ்நாட்டின் முதல்வர் விஜய், நாள்தோறும் தலைமைச் செயலகத்துக்கு கோட்- சூட் அணிந்து காலை 9 மணிக்கு வந்து பணிகளை முடித்த பிறகு மாலை இல்லம் திரும்புகிறார்.
2026ஆம் ஆண்டு நடைபெற்ற தமிழ்நாடு சட்டசபைத் தேர்தல் முடிவுகளை எதிர்நோக்கித் தமிழகம், இந்தியா மட்டுமன்றி உலகமே காத்திருந்தது. இதற்குக் காரணம் தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய்.
தமிழ்நாடு சட்டசபைத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை பெற்று கூட்டணிக் கட்சிகளின் ஆதரவொடு தமிழக வெற்றிக்கழகத் தலைவர் விஜய் முதலமைச்சராகப் பொறுப்பேற்றார்.
அரசியல் வரலாற்றிலேயே எந்த முதலமைச்சரும் இதுவரை அணிந்திராத கோட்-சூட் அணிந்து முதலமைச்சராக விஜய் பதவியேற்றார்.
இதனைத் தொடர்ந்து அவர் நாள்தோறும் தலைமைச் செயலகத்துக்கு கோட்- சூட் அணிந்து வருகிறார்.
முதலமைச்சர் விஜய்யின் ஒவ்வொரு செயல்பாடும் அரசியல் விமர்சகர்களால் உற்றுநோக்கப்படுகிறது.
இந்த நிலையில் வெள்ளிக்கிழமை இன்று (மே 29) பட்டு வேட்டி-சட்டையில் முதலமைச்சர் விஜய் தலைமைச் செயலகத்திற்கு வந்து பணிகளை மேற்கொண்டுள்ளார்.
தமது முகாம் அலுவலகத்திற்கு அருகில் நடைபெற்ற புதுமனை புகு விழாவில் கலந்து கொண்ட பிறகு தலைமைச் செயலகம் வந்துள்ளார் முதலமைச்சர்.
