3 (1)

இந்திய உயர்ஸ்தானிகராலயமும் ஹம்பாந்தோட்டை உதவி உயர்ஸ்தானிகராலயமும் இணைந்து மாத்தறை மிதெல்லவலை விகாரையில் ஏற்பாடு செய்துள்ள விசேட இந்திய பௌத்த மரபுகள் பற்றிய புகைப்படக் கண்காட்சி நேற்று 27 ஆரம்பித்து வைக்கப்பட்டது.

ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க, இந்திய உயர்ஸ்தானிகர் சந்தோஷ் ஜா ஆகியோர் கண்காட்சியைத் ஆரம்பித்து வைத்தனர்.

தேசிய வெசாக் வார ஆரம்ப வைபவத்தில் விகாராதிபதி ஹக்மனை ஞானவிமல நாயக்க தேரர், புத்தசாசன, சமய விவகாரங்கள் அமைச்சர் டாக்டர் ஹினிதுமை சுனில் செனவி, அமைச்சர்கள் சுனில் ஹந்துன்னெத்தி, சரோஜா சாவித்திரி போல்ராஜ் முதலானோர் கலந்துகொண்டனர்.

இந்திய உயர்ஸ்தானிகராலயம்,கொழும்பு