பாகிஸ்தானின் மர்தான் மாவட்டத்தில் இயந்திரக் கோளாறு காரணமாக வீதியோரம் நிறுத்தப்பட்டிருந்த மினி பஸ் மீது மற்றொரு பஸ் மோதியதில் 17 பேர் உயிரிழந்துள்ளதுடன் மேலும் 10 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
வீதியில் நின்று கொண்டிருந்த பஸ்சின் பின்புறத்தில் மற்றொரு பஸ் வேகமாக மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
