2026ஆம் ஆண்டில் மாகாண சபைத் தேர்தலை நடத்தும் திட்டம் அரசாங்கத்துக்கு இல்லை என மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச்செயலாளர் டில்வின் சில்வா தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் தேசிய மக்கள் சக்தியின் மக்கள் தொடர்பு அலுவலகத்தைத் திறந்து வைத்ததன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்குபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைத் தேர்தலுக்காக வரவு செலவுத் திட்டத்தில் ஒதுக்கப்பட்ட நிதி, நாட்டில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு மற்றும் அனர்த்த நிலைமைகளை சமாளிப்பதற்காக பயன்படுத்தப்பட்டதாக கூறியுள்ளார்.
மேலும், ரணில் விக்ரமசிங்க ஆட்சிக்காலத்தில் ஏற்பட்ட சட்டரீதியான சிக்கல்கள் காரணமாக தேர்தலை நடத்துவதில் தடைகள் ஏற்பட்டுள்ளதாகவும், தற்போது அதனை ஆராய பாராளுமன்றக் குழு நியமிக்கப்பட்டுள்ளதாகவும் அக்குழுவின் அறிக்கைக்கு அமைவாக, அடுத்த வருடத்தில் பாரிய பிரச்சினைகள் ஏதும் இல்லாவிடின் மாகாண சபைத் தேர்தலை நடத்த முடியுமெனவும் தெரிவித்துள்ளார்.
அதேவேளை, தேர்தலை நடத்த இந்தியா எந்தவித அழுத்தமும் வழங்கவில்லை என்றும், இலங்கை – இந்திய உறவு நல்ல புரிதலுடனும் ஒத்துழைப்புடனும் தொடர்வதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
