மட்டு காந்தி பூங்காவில் முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பு உணர்வு பூர்வமாக சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.
முள்ளிவாய்க்கால் மே 18 தமிழின அழிப்பின் 17 ஆவது நினைவேந்தல் மட்டக்களப்பு காந்தி பூங்காவில் இன்று திங்கட்கிழமை (18) நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு உயிர் நீத்தவர்களுக்கு சுடர் ஏற்றி மலர் தூவி உணர்வுபூர்வமாக அஞ்சலி செலுத்தினர்.
வடக்கு கிழக்கு ஒருங்கிணைப்புக் குழு ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்த நினைவேந்தலில் நூற்றுக்கணக்கானோர் கலந்து கொண்டு முள்ளிவாய்க்காலில் காலை 10.10 க்கு சுடர் ஏற்றி அஞ்சலி செலுத்தும் அதே நேரத்தில் பொது சுடர் ஏற்றி மலர் தூவி உயிர் நீத்தவர்களின் ஆத்மசாந்தி வேண்டி இரண்டு நிமிட மௌன அஞ்சலி செலுத்தினர்.
அதனைத் தொடர்ந்து கஞ்சி பரிமாறப்பட்டது. இனப்படுகொலை நடைபெற்ற போது நேரடியாகப் பாத்து, அங்கிருந்து தப்பி வந்தவர்கள் அங்கு நடந்த படுகொலை தொடர்பான அனுபவங்களைப் பகிர்ந்னர்.
சா. நடனசபேசன்



