வத்தளை வணவாசலைக்கும் ஹுணுப்பிட்டிக்கும் இடையில் இன்று (16) காலை ரயில் தடம்புரண்டதில் பயணிகள் 12 பேர் காயமடைந்துள்ளனர்.
பொல்காவளையிலிருந்து இன்று அதிகாலை களுத்துறை தெற்கு நோக்கிப் பயணித்த ரயிலே விபத்தைச் சந்தித்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.
காயமடைந்தவர்கள் அருகிலுள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். ஒருவர் மாத்திரம் மேலதிக சிகிச்சைக்காகக் கொழும்பு தேசிய மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார்.
