கொழும்பு, டாம் வீதி பொலிஸ் நிலையத்திற்கு எதிரே அமைந்துள்ள கட்டடம் ஒன்றில் இன்று (11) பெரும் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
அந்தப் பகுதியில் பரவி வரும் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காகக் குறைந்தது பத்துத் தீயணைப்பு வாகனங்கள் அந்த இடத்திற்கு விரைந்துள்ளன.
தீயணைப்பு வீரர்கள் தீவிரமாகப் போராடி தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
இந்தத் தீ விபத்தினால் இதுவரை எவருக்கும் காயங்களோ உயிர்ச்சேதங்களோ ஏற்பட்டதாகத் தகவல்கள் வெளியாகவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
