தெனியா கல்வி வலயத்தில் நான்கு பாடசாலைகள் தொடர்ந்து மூடல்

இரத்தினபுரி மாவட்டத்தின் எல்லையில் உள்ள தெனியா பாடசாலை மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் காய்ச்சல் நிலைமை காரணமாக, ஏற்கனவே மூடப்பட்டிருந்த தெனியா கல்வி வலயத்திற்குட்பட்ட நான்கு பாடசாலைகளைத் தொடர்ந்தும் மூடி வைப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

சுகாதார அதிகாரிகளின் பரிந்துரைக்கமைய, நோய் பரவலைக் கட்டுப்படுத்தும் ஒரு நடவடிக்கையாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாக தெனியா வலயக் கல்விப் பணிப்பாளர் நிஷாகா ஹெட்டிகொடை தெரிவித்தார்.

அதன்படி, தெனியா மத்திய கல்லூரி, தெனியா ராஜபக்ஷ மகா வித்தியாலயம், தெனியா புனித மத்தியூஸ் இரு மொழிப் பாடசாலை, பல்லேகம சித்தார்த்த வித்தியாலயம் ஆகிய பாடசாலைகளே நாளை (11) நாளை மறுதினம் (12) மூடப்பட்டிருக்கும் எனக் குறிப்பிட்டார்.

மாணவர்களிடையே வேகமாகப் பரவி வரும் இந்தக் காய்ச்சல் நிலைமை காரணமாக, கடந்த 7 ஆம் திகதி முதல் இந்தப் பாடசாலைகள் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளன.