விஜய் ஆட்சியமைப்பது உறுதியானது: திருமா நிபந்தனையற்ற ஆதரவு!

தமிழக வெற்றிக் கழகத் தலைவர் தமிழ்நாடு சட்டப் பேரவையில் ஆட்சியமைப்பதற்கு நிலவி வந்த இழுபறி முடிவுக்கு வந்துள்ளது.

பெரும் எதிர்ப்பார்ப்புக்கு மத்தியில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல் திருமாவளவன் நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக இன்று (09) மாலை அறிவித்துள்ளார்.

அதேநேரம் அதிமுக கோடீஸ்வர எம்எல்ஏ எனக் கூறப்படும் திருமதி லீமா றோஸ் உடன் மேலும் சில அதிமுக உறுப்பினர்களும் ஆதரவளிக்கத் தீர்மானித்துள்ளனர்.

அதற்கமைய விஜய்க்கு அறுதிப் பெரும்பான்மை கிடைத்துள்ளது. இந்நிலையில், தமிழக ஆளுநர் திங்களன்று சந்திக்குமாறு விஜய்க்கு அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.