யாழ். போதனா வைத்தியசாலையில் தீ விபத்து

யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் இன்று (09) அதிகாலை வேளையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.

வைத்தியசாலையின் மருந்து களஞ்சியசாலைப் பகுதியிலேயே இந்தத் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. அதிகாலை நேரம் என்பதால் திடீரெனப் பரவிய புகையினால் அவ்விடத்தில் பெரும் பரபரப்பு நிலவியது.

தீ விபத்து குறித்த தகவல் கிடைத்தவுடன் யாழ். மாநகர சபை தீயணைப்புப் படையினர்,வைத்தியசாலை ஊழியர்கள், பாதுகாப்புத் தரப்பினர், பொலிஸார் ஒருங்கிணைந்து செயற்பட்டுத் தீயைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தனர்

இந்தத் தீ விபத்து ஏற்பட்டமைக்கான காரணம் குறித்தோ அதனால் ஏற்பட்டுள்ள பொருட்சேத விபரங்கள் குறித்தோ இதுவரை உத்தியோகபூர்வ தகவல்கள் வெளியாகவில்லை.

சம்பவம் தொடர்பில் யாழ்ப்பாணப் பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.