ரஷ்ய சுகாதார அமைச்சர் கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம்

இலங்கை வந்துள்ள ரஷ்ய சுகாதார அமைச்சர் மிகைல் முராஷ்கோ (Mikhail Murashko) உள்ளிட்ட தூதுக்குழுவினர், இன்று மே 04 கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு விஜயம் செய்கின்றனர்.

கொழும்பு பல்கலைக் கழகத்தின் மருத்துவ பீடத்திற்கும் அவர்கள் செல்கின்றனர்.

மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு ரஷ்ய சுகாதார அமைச்சர் தலைமையிலான எழுவர் கொண்ட குழுவினர் நேற்று மே 03 இலங்கை வந்தனர்.

அவர்களின் விஜயத்தின்போத இரு நாட்டு சுகாதார அமைச்சுகளுக்கிடையில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கைச்சாத்திடப்படுகின்றன.