போதைப் பொருளால் ஏற்படுகின்ற பிரச்சனைகள் தீர்க்கும் செயலமர்வு

சுகாதார அமைச்சினால் கிழக்கு மாகாண ஆளுநரின் உத்தரவுக்கமைய கிளீன் ஸ்ரீலங்கா வேலை திட்டத்தின் கீழ் போதையற்ற சமூகத்தைக் கட்டி எழுப்பும் செயற்பாடுகள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் ஒரு கட்டமாக மட்டக்களப்பு மாவட்டத்தில் கல்வி சமூகத்துடன் இணைந்ததாக மாவட்ட பிராந்திய சுகாதார சேவை திணைக்களத்தினால் போதைப் பொருள் பாவனையால் சமூகத்தில் ஏற்படுகின்ற பிரச்சனைகளை தீர்க்கும் செயலமர்வு இன்று (30) மட்டக்களப்புவில் நடைபெற்றது

மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள இளையோரின் நலனை மேம்படுத்தும் பயிற்சியானது மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆர். முரளிஸ்வரன் தலைமையில் பிராந்திய சுகாதார சேவைகள் கேட்போர் கூடத்த்தில் நடைபெற்றது.

பிரதம விருந்தினராகக் கலந்து கொண்ட மண்முனை வடக்கு பிரதேச செயலாளர் திருமதி சிவப்பிரியா வில்வரத்தினம், சமூக மட்டத்தில் பண்பாட்டு ரீதியாக பொருத்தமான தலையீடுகளை உறுதி செய்ய அரச துறைகளின் ஒருங்கிணைப்பை வலுப்படுத்த வேண்டிய விடயங்கள் தொடர்பாக தெளிவூட்டினார்.

கிளீனிங் ஸ்ரீலங்கா வேலைத் திட்டத்தைச் சிறப்பாக நடைமுறைப்படுத்திய பிரதேச செயலாளர் சுகாதாரத் தரப்பினரால் இங்குக் கௌரவிக்கப்பட்டார்

வாழைச்சேனை மருத்துவ சுகாதார அலுவலர் வைத்தியர் பாமினி, சிறுவர்களில் அறிவாற்றல், நடத்தை, வாழ்க்கை முறை மாற்றங்கள்,பாடசாலை,சமூக சூழலில் CBT பயன்பாடு குறித்து விளக்கங்களை வழங்கினார்.

இந் நிகழ்வில் ஆசிரிய ஆலோசகர்கள், சுகாதார சேவைகள் இளைஞர் மையபணியாளர்கள், மாவட்ட செயலக உளவியல் சமூகப் பணியாளர்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.

எஸ். வரதராஜன், மட்டக்களப்பு