உலக அமைதியை வேண்டி நடைபெற்ற “எஹிபஸ்ஸிகோ” அமைதிக்கான நடை பயணத்தின் அரச நிறைவு விழா ஜனாதிபதியின் பங்கேற்புடன் புனித தந்ததாது, ஜய ஸ்ரீ மகா போதியின் கன்று ஆகியன ஜனாதிபதியின் கரங்களால் உத்தியோகபூர்வமாக வண. பஞ்ஞாகர தேரரிடம் கையளிக்கப்பட்டது.
அமைதி நடைபயணத்தின் அரச நிறைவு விழா ஜனாதிபதி தலைமையில் கொழும்பு சுதந்திர சதுக்கத்தில் நேற்று (28) மாலை நடைபெற்றது.
இதில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க:
இலங்கையை அமைதி, மனிதநேயத்தின் தீவாக மாற்றுவோம்.இலங்கை மக்கள் காட்டிய மரியாதை, முகங்களில் தென்பட்ட புன்னகை, அவர்கள் மனமுவந்து வழங்கிய பாதுகாப்பு என்பன உண்மையான வலிமை என்ன என்பதை உணர்த்துகின்றன. அமைதியான ஒரு தேசம் என்பது இதுதான். இதற்காக எனது சார்பாகவும், சமாதான நடை பயணக் குழுவினர்,இப்பயணத்தை அனுபவித்த அனைவர் சார்பாகவும் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்
ஒவ்வொரு தனிமனிதனும் தனக்குள் அமைதியை ஏற்படுத்திக்கொண்டால், குடும்பங்கள் அமைதியாகும், சமூகம் அமைதியாகும், நாடுகள் அமைதியாகும், அப்போது ஒட்டுமொத்த உலகமே அமைதியடையும். அமைதி என்பது வெளியிலிருந்து உள்ளே வருவதல்ல, அது உள்ளிருந்து வெளியே உருவாவதாகும்.
பஞ்ஞாகர தேரர்:
எதிர்காலத்தில் ஒரு நாள் அமெரிக்காவில் பௌத்த மதம் பற்றிப் பேசப்படும் போது, இந்த வரலாற்று நிகழ்வு நினைவு கூரப்படும்.
