அமெரிக்க கடவுச்சீட்டுகளில் அதிபர் டொனால்ட் டிரம்ப்

ஐக்கிய அமெரிக்காவின் 250 ஆவது சுதந்திர நாளைக் கொண்டாடும் வகையில் அமெரிக்கக் கடவுச்சீட்டுகளில் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பின் உருவத்தை உள்ளடக்குவதற்கு அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தீர்மானித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

ஜனநாயக நாடொன்றில் பதவியில் இருக்கும் ஒரு தலைவரின் உருவம் கடவுச்சீட்டில் அச்சிடப்படுவது மிகவும் அரிதான ஒரு சந்தர்ப்பமாகக் கருதப்படுவதுடன், இது ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நிகழ்வாக அமையும் எனவும் அந்தச் செய்திகளில் குறிப்பிடப்பட்டுள்ளது.