அர்ச்சுனா எம்பீக்கு ஏப்பிறல் 29 வரை விளக்க மறியல்

காணித்தகராற்றில் ஏற்பட்ட வாய்த்தர்க்கத்தின்போது துப்பாக்கியைக் காட்டி அச்சுறுத்திய குற்றச்சாட்டில் எம்பீ அர்ச்சுனாவை நாளை மறுநாள் ஏப்பிறல் 29 வரை விளக்க மறியலில் வைக்குமாறு மல்லாகம் நீதவான் உத்தரவிட்டுள்ளார்.

யாழ்ப்பாணம் பெரியவிளான் பகுதியில் உள்ள காணி ஒன்று தொடர்பாக எம்பீக்கும் மற்றுமொரு தரப்புக்கும் இடையில் தொடர்ந்தும் முரண்பாடு நிலவி வந்துள்ளது.

நேற்று முன்தினம் சனிக்கிழமை ஏற்பட்ட தகராற்றின்போது எம்பீ தன் துப்பாக்கியைக் காட்டி மிரட்டியதாக அவர் மீது முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

இதுபற்றி நடவடிக்கை எடுத்த இளவாலை பொலிஸார் எம்.பீயை விசாரித்து மல்லாகம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தினர். எம்பீயை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.