நாளை ஏப்பிறல் 20 முதல் நாட்டின் பல பகுதிகளில் மாலை வேளையில் இடியுடன் கூடிய மழை பெய்வதற்குச் சாதகமான வளிமண்டல நிலைமை நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் கூறியுள்ளது.
மேல், மத்திய, சப்பிரகமுவை, ஊவா, வடமேல், வடமத்திய,தென் ஆகிய மாகாணங்களில் பி.ப. 1.00 மணிக்குப் பின்னர் ஆங்காங்கே மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும்.
மேல், சப்பிரகமுவை ஆகிய மாகாணங்களிலும் காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் 50 மி.மீ அளவிலான மழை பெய்யக்கூடும்.
நாட்டின் ஏனைய பகுதிகளில் பொதுவாக வறட்சியான வானிலை நிலவும்.
மேல், மத்திய, சப்பிரகமுவை, ஊவா ஆகிய மாகாணங்களிலும், காலி, மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் சில இடங்களில் அதிகாலை வேளையில் பனிமூட்டமான நிலை காணப்படலாம்.
