உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் குழுவில் சமரி அத்தபத்து

உலக கிரிக்கெட் வீரர்கள் சங்கத்தின் வீரர்கள் ஆலோசனைக் குழுவில் உறுப்பினராக இலங்கை மகளிர் கிரிக்கெட் அணியின் தலைவி சமரி அத்தபத்து நியமிக்கப்பட்டுள்ளார்.

இஃது இலங்கை கிரிக்கெட் வரலாற்றில் ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.

சமரி அதபத்துவுடன் இணைந்து ஆப்கானிஸ்தானின் ரஷீத் கான், இத்தாலியின் வேன் மேட்சன், நியூசிலாந்தின் டேரில் மிட்செல், மேடி கிரீன் ஆகியோரும் இந்தப் புதிய குழுவில் இணைந்துள்ளனர்.

ஓய்வுபெற்ற நியூசிலாந்து வீரர்களான டிம் சவுதி, சோஃபி டிவைன் ஆகியோருக்குப் பதிலாக இவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இந்தக் குழுவில் ஏற்கனவே பெட் கம்மின்ஸ், ஜேசன் ஹோல்டர், ஹீதர் நைட் போன்ற முன்னணி சர்வதேச வீரர்கள் இடம்பெற்றுள்ளனர்.