நுவரெலியா கிறகரி வாவியில் அடையாளம் தெரியாத சடலம்!

நுவரெலியா – கிறகரி வாவியில் அடையாளம் தெரியாத ஆடவர் ஒருவரின் சடலம் இன்று (06) திங்கட்கிழமை காலை மீட்டெடுக்கப்பட்டுள்ளதாக நுவரெலியா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

வாவியில் படகுச் சவாரியில் ஈடுபட்டிருந்தவர்கள், சடலமொன்று மிதப்பதைக் கண்டு பொலிஸாருக்குத் தகவல் வழங்கியுள்ளனர்.

தகவலின் அடிப்படையில் நுவரெலியா பொலிஸார் உடனடியாகச் சம்பவ இடத்திற்கு விரைந்து விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

நுவரெலியா மாவட்ட நீதவான் சம்பவ இடத்திற்கு வருகை தந்து சடலத்தைப் பார்வையிட்டதன் பின்னரே, சடலம் வாவியிலிருந்து மீட்கப்பட்டு மேலதிக நடவடிக்கைகளுக்காகக் கொண்டு செல்லப்பபட்டது.

இறந்தவர் வாவியில் குதித்து தற்கொலை செய்துகொண்டாரா, எவராவது அவரைக் கொலை செய்து வாவியில் வீசிச் சென்றார்களா? என்பது குறித்துப் பொலிஸார் பல கோணங்களில் தீவிர விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.

இச்சடலம் இதுவரை அடையாளம் காணப்படவில்லை. உயிரிழந்தவர் தொடர்பான விபரங்களைச் சேகரிக்கப் பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர்.

கௌசல்யா