வெருகல் திருவள்ளுவர் ம. வி இற்கு விஞ்ஞான பாட ஆசிரியர் நியமனம்

மாணவர்களின் பத்து வருட விஞ்ஞான பாட ஆசிரியரின் ஏக்கத்தினை நிவர்த்தி செய்த இணைந்த கரங்கள்

வெருகல் பிரதேசத்தில் உள்ள திருவள்ளுவர் மகா வித்தியாலயத்தின் வேண்டுதலுக்கு அமைவாக 04/03/2026 இணைந்த கரங்ககள் அமைப்பின் ஊடாக விஞ்ஞான பாடத்திற்க்கான ஆசிரியர் ஒருவரை தற்காலிகமாக நியமிக்கும் நிகழ்ச்சி பாடசாலையின் அதிபர் தி. உதயணன் தலைமையில் நடைபெற்றது.

இவ் வகுப்புக்கான நிதிப் பங்களிப்பினை அவுஸ்ரேலியா நாட்டில் இருந்து வருகை தந்த ராஜ்பவன் உணவக உரிமையாளர் ஜெயராஜ் விஸ்வலிங்கம் வழங்கியுள்ளார்.

இணைந்த கரங்களோடு பயணிக்கும் மட்டக்களப்பு ஆயித்தியமலை பாடசாலையின் அதிபர் து. வித்தியானந்தன், வேப்பையடி கலைமகள் வித்தியாலய அதிபர் க. தியாகராஜா, முன்னாள் கோட்டக்கல்விப் பணிப்பாளர் ப. மதிபாலசிங்கம், முதூர் கல்வி வலயத்தின் விஞ்ஞான பாட ஆசிரிய ஆலோசகரும் விஞ்ஞானபாட வளவாளர், இணைந்த கரங்கள் உறுப்பினர்களான காந்தன், துலக்சன் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

சா. நடனசபேசன்