கீளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டம் இன்று (19) காலை 5.45 இற்கு கிளீன் ஸ்ரீ லங்கா வேலைத் திட்டம் சுற்றாடல் அமைச்சர் கலாநிதி தம்மிக்க பட்டபெந்தி , கிராமிய அபிவிருத்தி அமைச்சர் உப்பாலி பண்ணிலகே ஆகியோர் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந் நிகழ்வில் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கள் நுவரெலியா மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் நுவரெலியா மாவட்டத்தில் உள்ள அனைத்து பொலிஸ் நிலைய பொலிசார் நுவரெலியா மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி துஷாரி தென்னகோன் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்கள் நோர்வூட் பிரதேச செயலாளர் தலவாக்கலை பிரதேச செயலாளர் நுவரெலியா மாவட்ட செயலாளர் அம்பகமு பிரதேச செயலாளர் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கந்தையா இராஜ்குமார் மற்றும் உறுப்பினர்கள் நோர்வூட் பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் ஹட்டன் நகர சபை முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் தலவாக்கலை நகர சபை முதல்வர் மற்றும் உறுப்பினர்கள் அம்பகமு பிரதேச சபையின் தவிசாளர் மற்றும் உறுப்பினர்கள் லக்சபான இராணுவ முகாம் அதிகாரி மற்றும் இராணுவ சிப்பாய்கள் மவுஸ்சாகலை நீர் தேக்க பகுதியில் உள்ள இராணுவ முகாம் அதிகாரி மற்றும் இராணுவ சிப்பாய்கள் மவுஸ்சாகலை நீர் தேக்க பகுதியில் உள்ள அதிரடி படையினர் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் கீலீன் ஸ்ரீ வேலை திட்டத்தில் கலந்து கொண்டுள்ளனர்.
கீலீன் ஸ்ரீ லங்கா வேலை திட்டம் சிவனடி பாத மலை உச்சியில் இருந்து நல்லதண்ணி நகர் பகுதியில் இடம் பெற்றுள்ளது.
மலை உச்சியில் இருந்து சாலையில் இருபுறமும் உள்ள அனைத்து உக்கும் உக்கா பொருட்கள் மற்றும் பிளாஸ்டிக் பொருட்கள் பொலித்தீன் என்பன மற்றும் சிவனடி பாத மலை பகுதியில் உள்ள வன பகுதியில் உள்ள குப்பைகள் உக்கும் உக்கா பொருட்கள் நல்லதண்ணி நகர் வரை துப்பரவு செய்யும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்த வேலை திட்டம் அதி மேதகு ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க இலங்கை ஜனநாயக சோசலிசக் குடியரசின் முதல் தலைவர் அவர்களின் வழிகாட்டலில் இன்றைய தினம் நடைபெற்ற நிலையில் உள்ளது.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்.






