நெதர்லாந்தை வீழத்தி இந்திய அணி வெற்றி

ஐசிசி ரி20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் 36ஆவது போட்டியில் இந்தியா, நெதர்லாந்து அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இந்தியா அணி முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்தது.

இந்திய அணி 20 ஓவர்கள் நிறைவில் 06 விக்கெட்டுகளை இழந்து 193 ஓட்டங்களைப் பெற்று நெதர்லாந்து அணிக்கு 194 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 07 விக்கெட்டுகளை இழந்து 176 ஓட்டங்களை மாத்திரமே பெற்று தோல்வியடைந்தது