சீனாவில் மருத்துவம் பயிலும் மாணவி ஒருவரின் நிர்வாணப் புகைப்படத்தையும் காணொலியையும் சூட்சுமமாகப் பெற்று டெலிகிராம் சமூக ஊடகத்தில் பரப்பியதாக சந்தேகிக்கப்படும் இளைஞர் விளக்க மறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
மகரகம நாவின்ன பகுதியைச் சேர்ந்த இந்த இளைஞரைக் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் கணினி குற்றப் பிரிவு பொலிஸார் கைது செய்து நேற்று (17) கொழும்பு பிரதம நீதவான் அசங்க போதரகம முன்னிலையில் ஆஜர்படுத்தினர்.
அவரை இம்மாம் 27 ஆம் திகதி வரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.
