புதுடில்லியில் ஜனாதிபதிக்கு மகத்தான வரவேற்பு

இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் விசேட அழைப்பின் பேரில், ‘AI Impact Summit 2026’ மாநாட்டில் பங்கேற்பதற்காகப் பயணமான ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, இன்று மாலை (17) புதுடில்லி இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையத்தைச் சென்றடைந்தார்.

இந்திய மத்திய இணை அமைச்சர் ஸ்ரீ ராஜ் பூஷன் சௌதரி உள்ளிட்ட முக்கிய அதிகாரிகள் குழுவினால் ஜனாதிபதிக்கு வரவேற்பு அளிக்கப்பட்டது.