பிரித்தானிய பிரதிப் பிரதமர் இலங்கை விஜயம்

பிரித்தானிய பிரதிப் பிரதமர் டேவிட் லாமி உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டு இன்று (17) காலை இலங்கை வந்துள்ளார்.

இந்த விஜயத்தின்போது, ​​அவர் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க, பிரதமர் கலாநிதி ஹரினி அமரசூரிய, வெளிவிவகார அமைச்சர் விஜித்த ஹேரத் ஆகியோரைச் சந்திக்கின்றார்.

கடந்த ஆண்டு இறுதியில் நாடு முழுவதும் பரவலான சேதத்தை ஏற்படுத்திய டிட்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்குப் பிரித்தானியா ஆதரவை வழங்கும் மனிதாபிமான உதவி, இரு நாடுகளுக்குமிடையிலான உறவை வலுப்படுத்தல் குறித்து இநத விஜயத்தில் கவனம் செலுத்தப்படும்.