தமிழகத்தில் அகதி முகாம்களிலும் வெளியிலும் வாழும் 89 ஆயிரம் இலங்கைத் தமிழர்களுக்கும் இந்தியக் குடியுரிமை வழங்க நடவடிக்கை எடுக்குமாறு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், பிரதமர் நரேந்திர மோடிக்குக் கடிதமூலம் கோரிக்கை விடுத்துள்ளார்.
1980 களில் அகதிகளாக இந்தியா வந்தவர்களும் இந்தியாவில் பிறந்தவர்களும் திருமணம் செய்து வாழ்பவர்களும் பல்வேறு சட்டச் சிக்கல்களைச் சந்திக்கிறார்கள்.
இவர்களுக்குத் தீர்வாக இந்திய குடியுரிமை வழங்க மனிதாபிமான அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று முதலமைச்சர் தனத கடிதத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
மனோ கணேசன் பதில்

மிழ் நாட்டில் உள்ள இலங்கைத் தமிழர்கள் விரும்பும் பட்சத்தில் மாத்திரம் அவர்களுக்கு இந்தியக் குடியுரிமை வழங்கலாம் என்றும் இல்லையென்றால், அவர்களை முகாம்களிலேயே இலங்கையர்களாக வாழ அனுமதிக்க வேண்டும் என்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவர் மனோ கணேசன், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு. க. ஸ்டாலினுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கேட்டுக்கொண்டுள்ளார்.
