நாடு முழுவதும் சட்டத்தரணிகள் இன்று பணிப் பகிஷ்கரிப்பு

அக்குரேகொடையில் சட்டத்தரணி ஒருவரும் அவர் மனைவியும் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தைக் கண்டித்து நாடு முழுவதும் சட்டத்தரணிகள் இன்று (16) வழக்குகளுக்கு ஆஜராகாமல் பகிஷ்கரிப்பு செய்கிறார்கள்.

இந்தச் சம்பவத்தின் சூத்திரதாரிகள் இன்னமும் கண்டறியப்படாததால் தாம் இந்த முடிவுக்கு வந்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் தெரிவித்துள்ளது.

அதேநேரம் நீதி நிலைநாட்டப்படாவிட்டால் போராட்டம் விஸ்தரிக்கப்படும் என்று தேசிய மக்கள் சக்தி சட்டத்தரணிகள் அறிவித்துள்ளனர்.