பத்தரமுல்லை, அக்குரேகொடையில் இருவர் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தின் துப்பு இன்னும் துலங்கவில்லை.
அதனால், சந்தேக நபர்களுக்கு வலைவீசியுள்ள் பொலிஸார், பொது மக்களின் உதவியை நாடியுள்ளனர்.
கடந்த வெள்ளிக்கிழமை (13) மாலை அக்குரேகொடை வர்த்தகத் தொகுதிக்கு முன்பாக சட்டத்தரணி ஒருவரும் அவர் மனைவியும் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாக நேற்று (14) மாலை வரை சந்தேக நபர் எவரும் கைதுசெய்யப்படவில்லை.
