கல்லடி கொக்கட்டி சிவனாலயத்தில் சிவராத்திரி வழிபாடுகள்

சிவராத்திரியையொட்டி கல்லடி கொக்கட்டி ஈஸ்வரர் சிவன் ஆலயத்தில் வழிபாடுகள் நடைபெற்றன.

சிவபெருமானின் விரதங்களில் ஒன்றான சிவராத்திரி தினத்தையொட்டி இன்று கிழக்கு மாகாணத்தில் உள்ள சிவன் ஆலயங்களில் விசேட வழிபாடுகள் இடம் பெற்றன.

உலகை ஆளும் சிவபெருமானின் அற்புதங்கள் நிகழும் ஆலயங்களில் கிழக்கு மாகாணத்தில் சிறப்பு பெற்ற ஆலயத்தில் பொதுமக்களால் சிவலிங்கத்திற்கு பாலாபிஷேகம் நடத்தப்பட்டமை சிறப்பம்சமாகும்.

கல்லடி கடற்கரை ஓரத்தில் அமைந்துள்ள சிவன் ஆலயத்தில் அடியார்கள் தங்களின் வேண்டுகோளை நிறைவேற்ற இங்குள்ள கொன்றை மரத்தில் நேர்த்திக் கடன்களைக் கட்டி வழிபடும் ஆலயமாக இது சிறப்பு பெற்றுள்ளது

தேவார பாராயணங்கள் மூலம் வழிபாடுகள் இடம்பெறும் ஆலயத்தில் அடியார்களின் பூஜை பொருள்களை வைத்தே இங்கு வழிபாடுகள் ஆகம முறைப்படி இடம் பெற்று வருகின்றன.

மட்டக்களப்பு கல்லடி கொக்கட்டி ஈஸ்வரர் ஆலய பிரதம குரு தம்பிப்பிள்ளை தவராஜா தலைமையில் இன்று சிவராத்திரி விசேட வழிபாடுகள் இடம் பெற்றன. அப்போது அதிகளவிலான பக்தர்கள் கலந்து கொண்டனர்.

மட்டக்களப்பு வரதன்