ஐசிசி T20 உலகக் கிண்ணக் கிரிக்கெட் தொடரின் பெரிதும் பரபரப்பாக எதிர்ப்பார்க்கபட்ட 26ஆவது போட்டியில் இந்திய அணி 61 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியுள்ளது.
நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபடத் தீர்மானித்தது.
அதற்கமைய இந்திய அணி 7 விக்கட் இழப்பிற்கு 175 ஓட்டங்களைப் பெற்றது.
பாகிஸ்தான் அணி 176 ஓட்டங்கள் வெற்றி இலக்குடன் பதிலுக்குத் துடுப்பெடுத்தாடியது. அந்த அணி 114 ஓட்டங்களுக்கு சகல விக்கட்டுகளையும் இழந்தது.
