ஜேவிபி (ஜனதா விமுக்தி பெரமுன) பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா முதற்தடவையாக இந்தியாவுக்குப் பயணம் மேற்கொண்டார்.
கலாசார உறவுகளுக்கான இந்தியச் சபையின் விசேட விருந்தினராகக் கடந்த பெப்ரவரி 5-12 ஆம் திகதி வரை பயணம் மேற்கொண்ட ரில்வின் சில்வாவுடன் பாராளுமன்ற உறுப்பினர்கள் கிட்ணன் செல்வராஜ், கே. இளங்குமரன், ஜேவிபி மத்திய குழு உறுப்பினர் ஜனக்க அதிகாரி, ஊடகப் பிரிவின் தலைவர் ஹேமதிலக கமகே, சர்வதேச உறவுகள் பிரிவின் கல்பனா மதுபாஷினி ஆகியோரும் சென்றிருந்தனர்.
அவர்கள் புதுடில்லி, அஹமதாபாத், திருவனந்தபுரம் ஆகிய இடங்களுக்கும் சென்றனர்.




