2026-2027 கல்வி ஆண்டில் இந்தியாவில் ஹிந்தி பயில விண்ணப்பம் கோரப்படுவதாக கொழும்புவிலுள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
19-45 வயதுக்கு இடைப்பட்ட மாணவர்கள் ஆக்ராவிலுள்ள ஹிந்தி கற்கை நிலையத்தில் பயில்வதற்கு விண்ணப்பிக்க முடியும்.
தெரிவு செய்யப்படும் மாணவர்களுக்கான இருவழி விமானப் பயணச் சீட்டு, தங்குமிடவசதி உள்ளிட்ட அனைத்துச் செலவையும் இந்திய அரசின் மனித வள மேம்பாட்டு அமைச்சு ஏற்கிறது.
ஹிந்தி மொழிக் கற்கையில் ஆரம்ப நிலையில் உள்ள மாணவர்கள் விண்ணப்பிக்க தகுதியுடையவர்களாவர்.
இது தொடர்பான மேலதிக விபரங்களை:
https://www.hcicolombo.gov.in/section/news/ இணைப்பைச் சொடுக்கி இந்திய உயர்ஸ்தானிகராலயத்தின் இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும்.
இலங்கையிலிருந்து தெரிவுசெய்யப்படும் மாணவர்கள்,பூரணப்படுத்தப்பட்ட விண்ணப்பப் படிவத்துடன் கொழும்பு 7, கிறகரி வீதி, இல.16/2 இல் அமைந்துள்ள சுவாமி விவேகாந்தா கலாசார நிலையத்தில் (இந்திய கலாசார நிலையம்) மார்ச் 09, 2026 அன்று காவை 10 மணிக்கும் பிற்பகல் 1 மணிக்குமிடையில் நேர்முகத் தேர்வுக்கு வருகை தர வேண்டும் என்று இந்திய உயர்ஸ்தானிகராலயம் அறிவித்துள்ளது.
