பொகவந்தலாவ, கொட்டியாகலை தோட்டத்தின் மேல் பிரிவில் (Field No 03) காட்டுப் பன்றிகள் மற்றும் வனவிலங்குகளை வேட்டையாடுவதற்காக வைக்கப்பட்டிருந்த கம்பி வலையில் சிக்கி, சுமார் 4 அடி நீளமான அரிய வகை மலைச் சிறுத்தை ஒன்று உயிரிழந்துள்ளது.
இன்று காலை தோட்டத் தொழிலாளி ஒருவர் இதனைக் கண்டு பொகவந்தலாவ பொலிசாருக்கு அறிவித்துள்ளார். உயிரிழந்த சிறுத்தையின் உடல் நல்லதண்ணி வனவிலங்கு அதிகாரிகளால் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுடன், மேலதிக பரிசோதனைகளுக்காக ரந்தெனிகல மிருக வைத்தியசாலைக்குக் கொண்டு செல்லப்பட உள்ளது.
வலையிட்ட நபரைக் கண்டறிய வனவிலங்கு அதிகாரிகள் தீவிர விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இச் சம்பவம் குறித்து நல்லதண்ணி வனத்துறை அதிகாரிகள் மற்றும் பொகவந்தலாவ பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
மஸ்கெலியா நிருபர் செ. தி. பெருமாள்

