கோவில்போரதீவு கண்ணகி அறநெறி பாடசாலையின் பொங்கல் விழா

மட்டக்களப்பு மாவட்டம், பட்டிருப்பு வலயத்திற்குட்பட்ட கோவில்போரதீவு கண்ணகி அறநெறிப்பாடசாலையின் பொங்கல் விழாவானது இன்று (08.02.2026)ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை பக்திபூர்வமாகவும் கோலாகலமாகவும் நடைபெற்றது.

இன்றைய தினம் காலை ஸ்ரீ மீனாட்சி கட்டுப்பிள்ளையார் ஆலயத்தில் ஆலய அர்ச்சகர்களினால் விசேட பூஜைகள் வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன.

அதனைத் தொடர்ந்து மங்கல வாத்தியங்கள் முழங்க, ஆலய முன்றலில் பொங்கல் பானை வைக்கப்பட்டு பொங்கல் விழா இனிதே ஆரம்பமானது.

மாணவர்களின் கலை ஊர்வலம்:

பூஜை வழிபாடுகளைத் தொடர்ந்து, ஸ்ரீ மீனாட்சி கட்டுப்பிள்ளையார் ஆலயத்திலிருந்து மாணவர்களின் பல்வேறு கலை கலாசார நிகழ்வுகள் அடங்கிய ஊர்வலம் ஆரம்பமானது.

கிராமத்தின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்ற இவ்ஊர்வலம், கோவில்போரதீவு உதயதாரகை கலை விளையாட்டுக் கழக மைதானத்தை சென்றடைந்தது.

அதனைத் தொடர்ந்து மைதானத்தில் அறநெறிப்பாடசாலையின் பொறுப்பாசிரியர் டெ.ரேணுகா தலைமையில் விசேட நிகழ்வுகள் இடம்பெற்றன.

இந்நிகழ்வில் போரதீவுப்பற்று பிரதேச சபையின் கோவில்போரதீவு வட்டார உறுப்பினர் மகேஸ்பரன் கோபிநாத் அவர்கள் சிறப்பு அதிதியாகக் கலந்துகொண்டார்.

சா. நடனசபேசன்