கண்டி கெட்டம்பை மேம்பால நிர்மாணப் பணிகளை ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க இன்று மீள தொடக்கிவைத்தார்.
ஹங்கேரி அரசாங்கத்தின் கடன் உதவித் திட்டத்தின் கீழ் 2021 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட இந்தப் பாலத்தின் நிர்மாணப் பணிகள், அப்போதைய பொருளாதார நெருக்கடியால் ஹங்கேரி அரசு கடனை இடைநிறுத்தியதால், முடங்கிப்போயின. இப்போது தேசிய நிதியின் மூலம் இந்தப் பாலம் மீள நிர்மாணிக்கப்படுகிறது.
