கொழும்புவில் மூன்று நாள்களாக இயங்காத தொடர்மாடி மின்னுயர்த்தி

கொழும்பு 15 ஹேனமுல்லையில் அமைந்துள்ள மெத்சந்த செவன தொடர்மாடிக் குடியிருப்பின் சீ புளொக்கில் கடந்த மூன்று நாள்களாக மின் உயர்த்தி செயற்படவில்லை.

இதனால், 14 மாடிவரை படிகளில் ஏறி இறங்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

அவ்வாறு படிகளில் ஏறிச் செல்ல முடியாத முதியவர்களும் நோயாளர்களும் கீழ்த் தளத்தில் தவித்துக்கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கு நீதி வழங்கக் கோரி இன்று மெத்சந்த செவன தொடர்மாடிக் குடியிருப்பாளர்கள் கவனவீர்ப்பு போராட்டமொன்றில் ஈடுபட்டனர்.

பாதிப்புக்குள்ளாகியிருக்கும் இந்த மக்களுக்கு உடனடியாகத் தீர்வினைப் பெற்றுத் தருமாறு அந்த மக்கள் கோரிக்கை விடுக்கிறார்கள்.

நகர அபிவிருத்தி அதிகார சபையின் கீழ் உள்ள இந்தக் குடியிருப்பு எந்தப் பராமரிப்பும் இல்லாமல் இருப்பதாக குடியிருப்பாளர்கள் தெரிவிக்கின்றார்கள்.

மாநகர சபை குப்பை லொறிகள் வந்தாலும் அவர்களுக்கு ஐயாயிரம் ரூபாய் கொடுக்க வேண்டியிருக்கிறது. நகர அபிவிருத்தி அதிகார சபைக்கு இதுபற்றி முறைப்பாடு செய்தாலும் அவர்கள் கண்ணில் எடுப்பதில்லை என்கிறார்கள் குடியிருப்பாளர்கள்.