திருக்கோவில் கல்வி வலய தைப்பொங்கல் விழா வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர் .உதயகுமார் தலைமையில் நடைபெற்றது.
திருக்கோவில் கல்விவலயத்தின் ஏற்பாட்டில் தமிழர்களின் பண்பாட்டு விழாவான பொங்கல் திருவிழா தமிழரின் வாழ்வியலோடு குறிப்பாக உழவுத் தொழில் செய்து வரும் சமூகத்தோடு இணைந்து சூரியனுக்கு நன்றி தெரிவிக்கும் விழாவான தைப்பொங்கல் விழா வலயக்கல்விப் பணிப்பாளர் ஆர் .உதயகுமார் தலைமையில் 28 ஆம்திகதி புதன்கிழமை வலயக்கல்வி அலுவலக முன்றலில் பிரமாண்டமான முறையில் இடம்பெற்றது
இதன்போது மாணவர்களின் கலைநிகழ்வுகளும் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது
சா. நடனசபேசன்




