நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு வர இரு வார கால அவகாசம் கோரினார் ஷிரந்தி
நிதிக்குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு (எப்சிஐடி) இன்று காலை (27) வருகைதர முடியாது என்று முன்னாள் ஜனாதிபதியின் பாரியார் ஷிரந்தி ராஜபக்ஷ அறிவித்துள்ளதாகத் தெரியவருகிறது.
முன்னாள் ஜனாதிபதியின் பதவிக் காலத்தில் சிரிலிய வங்கிக் கணக்கு நடத்தப்பட்டமை குறித்து முன்னெடுக்கப்படும் விசாரணைக்காக வாக்குமூலம் வழங்க இன்று காலை ஒன்பது மணிக்கு வருகை தருமாறு நிதிக் குற்றப் புலனாய்வுப் பிரிவு அறிவித்திருக்கிறது.
எனினும், தனிப்பட்ட காரணத்திற்காகத் தன்னால் இன்று வருகை தர முடியாது என்றும் இரு வார கால அவகாசம் வழங்குமாறும் திருமதி ஷிரந்தி ராஜபக்ஷ கேட்டுக்கொண்டிருப்பதாக செய்தவெளியாகி உள்ளது.
